டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணிக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேலம் ஸ்பார்டன்ஸ்..!

20 ஓவர்கள் முடிவில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது.

Update: 2023-07-03 15:45 GMT

image courtesy: TNPL twitter

நெல்லை,

டிஎன்பிஎல் தொடரின் இறுதிகட்ட லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அரவிந்த் மற்றும் கவுசிக் காந்தி முறையே 26 ரன்கள் மற்றும் 7 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய கவின் 25 ரன்கள், மோகித் ஹரிஹரன் 21 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய சன்னி சந்து 39 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 57 ரன்கள் விளாசி நம்பிக்கை அளித்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் சேலம் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. திண்டுக்கல் தரப்பில் வருண் சக்கரவர்த்தி, சுபோத் பதி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். கிஷோர் ஒரு விக்கெட் எடுத்தார். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி பேட்டிங் செய்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்