பெண்கள் கிரிக்கெட்; வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

Update: 2024-04-16 11:21 GMT

Image Courtesy: @BCCIWomen

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வங்காளதேசத்திற்கு எதிரான இந்திய பெண்கள் அணி விவரம்;

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, தயாளன் ஹேமலதா, சஜனா சஜீவன், ரிச்சா ஹோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராதா யாதவ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், அமஞ்சோத் கவுர், ஸ்ரேயங்கா பட்டீல், சைகா இஷாக், ஆஷா ஷோபனா, ரேனுகா சிங் தாக்கூர், டைட்டஸ் சாது.

போட்டி அட்டவணை விவரம்;

முதல் டி20 போட்டி - ஏப்ரல் 28 - சில்ஹெட்

2வது டி20 போட்டி - ஏப்ரல் 30 - சில்ஹெட்

3வது டி20 போட்டி - மே 2 - சில்ஹெட்

4வது டி20 போட்டி - மே 6 - சில்ஹெட்

5வது டி20 போட்டி - மே 9 - சில்ஹெட்


Tags:    

மேலும் செய்திகள்