பெண்கள் கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் - வங்காளதேச அணி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

Update: 2024-04-16 16:20 GMT

Image Courtesy: @ICC

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு நிகர் சுல்தானா ஜோட்டி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த அணியில் 15 வயதே நிரம்பிய ஹபீபா இஸ்லாம் பிங்கி அறிமுக வீராங்கனையாக இடம் பிடித்துள்ளார்.

வங்காளதேச அணி விவரம்; நிகர் சுல்தானா ஜோட்டி (கேப்டன்), நஹிதா அக்டர் (துணை கேப்டன்), முர்ஷிதா காதுன், சோபானா மோஸ்டரி, ஷோர்னா அக்தர், ரிது மோனி, ரபேயா கான், சுல்தானா காதுன், பஹிமா காதுன், மருபா அக்டர், பரிஹா இஸ்லாம் ட்ரிஸ்னா, ஷோரிபா காதுன், திலாரா அக்டர், ரூப்யா ஹைடர் ஜெலிக், ஹபீபா இஸ்லாம் பிங்கி

போட்டி அட்டவணை விவரம்;

முதல் டி20 போட்டி - ஏப்ரல் 28 - சில்ஹெட்

2வது டி20 போட்டி - ஏப்ரல் 30 - சில்ஹெட்

3வது டி20 போட்டி - மே 2 - சில்ஹெட்

4வது டி20 போட்டி - மே 6 - சில்ஹெட்

5வது டி20 போட்டி - மே 9 - சில்ஹெட்

Tags:    

மேலும் செய்திகள்