பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்; ஹேலி மேத்யூஸ் அபார ஆட்டம்...பாகிஸ்தானை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக ஆடிய கேப்டன் ஹேலி மேத்யூஸ் 140 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

Update: 2024-04-19 09:32 GMT

Image Courtesy: @ICC

கராச்சி,

வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக ஆடிய கேப்டன் ஹேலி மேத்யூஸ் 140 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் சாடியா இக்பால், துபா ஹாசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 270 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 35.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 113 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக துபா ஹாசன் 25 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்