பெண்கள் டி20 கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடும் இந்திய அணி அறிவிப்பு
ஆஸ்திரேலிய பெண்கள் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வருகிறது.;
Image Courtesy: ICC Twitter
மும்பை,
ஆஸ்திரேலிய பெண்கள் அணியினர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இந்தியா வருகின்றனர். இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டில் மும்பை டிஒய் பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 9 அன்று தொடங்குகிறது.
இந்நிலையில் இந்தத் தொடருக்கான இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் தலைமை தாங்குகிறார். ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாம நியமிக்கப்பட்டுள்ளார். பூஜா வஸ்ட்ராக்கர் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.
இந்திய பெண்கள் அணி விவரம்:-
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, யாஷ்டிகா பாடியா (விக்கெட் கீப்பர்), ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், ரேனுகா சிங் தாகூர், மேக்னா சிங், அஞ்சலி ஷர்வானி, தேவிகா வாய்ட்யா, எஸ் மேக்னா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஹார்லின் டியோல்.
நெட் பவுலர்கள்: மோனிகா பட்டேல், அருந்ததி ரெட்டி, எஸ்பி போகர்கர், சிம்ரன் பகதூர்.