ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு வேல்ஸ் அணி தகுதி

ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு வேல்ஸ் அணி தகுதிபெற்றது.

Update: 2019-11-20 23:10 GMT
கார்டிப்,

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி அடுத்த ஆண்டு (2020) நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்றில் கார்டிப்பில் நேற்று முன்தினம் நடந்த ‘இ’ பிரிவு ஆட்டம் ஒன்றில் வேல்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தியது. ஆரோன் ராம்சி 2 கோல்கள் அடித்தார்.இந்த பிரிவில் வேல்ஸ் அணி 4 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்ததுடன், ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கும் தகுதி பெற்றது.

மேலும் செய்திகள்