ஐஎஸ்எல் 2020-21ன் 40வது போட்டி: கேரளத்துக்கு முதல் வெற்றி

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 2-0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சி அணியை வீழ்த்தியது.

Update: 2020-12-28 01:36 GMT
கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 2-0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சி அணியை வீழ்த்தியது
இது நடப்பு சீசனில் கேரளம் பதிவு செய்துள்ள முதல் வெற்றியாகும். மறுபுறம், ஹைதராபாதுக்கு இது 2-ஆவது தோல்வி. கோவாவின் பாம்போலிம் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கேரளத்துக்கு முதல் கோல் வாய்ப்பு 29-ஆவது நிமிடத்தில் கிடைத்தது. அப்போது கேரளாவுக்கு கிடைத்த ஃப்ரீ கிக்கை ஃபகுண்டோ பெரைரா உதைக்க, அது ஹைதராபாத் தடுப்பாட்ட வீரரிடம் பட்டு மீண்டும் பெரைராவிடம் வந்தது. அவா் மீண்டும் உதைத்த பந்தை கேரளா வீரா் அப்துல் ஹக்கு தலையால் முட்டி கோலாக்கினாா். 

நடப்பு சீசனில் இது அவரது முதல் கோலாகும்.இதனால் ஆட்டம் விறுவிறுப்பானது. ஹைதராபாதின் கோல் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காததால் முதல் பாதி முடிவில் கேரளா 1-0 என முன்னிலையில் இருந்தது. பின்னா் நடைபெற்ற 2-ஆவது பாதியில் 88-ஆவது நிமிடத்தில் கேரளா வீரா் ஜோா்டான் முா்ரே கோலடிக்க, இறுதியில் அந்த அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

மேலும் செய்திகள்