பெண்கள் உலக கோப்பை கால்பந்து 2023: தகுதி பெறும் வாய்ப்பை இழந்த இந்திய அணி

ஆசிய கோப்பை கால்பந்து: 12 வீராங்கனைகளுக்கு கொரோனா ஏற்பட்டதால், இந்திய அணி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

Update: 2022-01-24 23:48 GMT
கோப்புப்படம்
மும்பை,

பெண்களுக்கான 20-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி மராட்டியத்தில் 3 இடங்களில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி, முதல் ஆட்டத்தில் ஈரானுடன் கோல் இன்றி டிரா கண்டது. 

இந்த நிலையில் தரவரிசையில் 55-வது இடம் வகிக்கும் இந்தியா தனது 2-வது லீக்கில் 39-ம் நிலை அணியான சீனதைபே அணியுடன் மோதுவதாக இருந்த ஆட்டமானது, இந்திய அணியில் கொரோனா பரவியதை அடுத்து இந்தியா- சீன தைபே அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்திய அணியிலுள்ள 12 வீராங்கனைகளுக்கு கொரோனா ஏற்பட்டதால், இந்திய அணி  போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

இதனால் 2023-ம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறும் இந்திய அணியின் கனவு கலைந்தது.

மேலும் செய்திகள்