மாநில ஆக்கி: தெற்கு ரெயில்வே அணி வெற்றி

இந்தியன் வங்கி கோப்பைக்கான 2-வது மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

Update: 2018-03-02 20:30 GMT
சென்னை,

இந்தியன் வங்கி கோப்பைக்கான 2-வது மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு போலீஸ் அணி 7-3 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு ஜூனியர் லெவன் அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஏ.ஜி.அலுவலக அணியை சாய்த்தது. இன்றைய ஆட்டங்களில் சென்னை சிட்டி போலீஸ்-ஆக்கி அகாடமி (பிற்பகல் 2 மணி), ஐ.சி.எப்.-சாய் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்