ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்கி தொடர்; 5வது ஆட்டத்தில் போராடி தோல்வியை சந்தித்த இந்தியா

இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் கடைசி ஆக்கி போட்டி இன்று நடைபெற்றது.

Update: 2024-04-13 10:43 GMT

Image Courtesy: @TheHockeyIndia

பெர்த்,

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆடியது. இதில் முதல் 4 ஆட்டங்கள் முடிவில் அனைத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 4-0 என முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் கடைசி ஆக்கி போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திலாவது இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தனர்.

ஆனால் இந்த ஆட்டத்திலும் 2-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது.  இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆக்கி தொடரை முழுமையாக (5-0) ஆஸ்திரேலியா கைப்பற்றி அசத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்