5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இந்திய ஆக்கி அணி ஆஸ்திரேலியா பயணம்

ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆக்கி அணி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றது.

Update: 2024-04-02 22:50 GMT

Image Courtesy : @TheHockeyIndia

புதுடெல்லி,

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா ஆக்கி அணிகள் இடையிலான போட்டி தொடர் வருகிற 6, 7, 10, 12, 13 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

இந்த போட்டியில் பங்கேற்க ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி நேற்று முன்தினம் இரவு ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றது. முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கருத்து தெரிவிக்கையில், 'பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக நடக்கும் இந்த தொடர் எங்களது பலத்தை ஆய்வு செய்வதற்கும், எந்தெந்த துறையில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதை அறியவும் ஒரு சிறந்த வாய்ப்பை அளிக்கிறது. களத்தில் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்' என்றார்.

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய ஆக்கி அணி வருமாறு:-

கோல் கீப்பர்கள்: கிருஷ்ணன் பகதூர் பதாக், ஸ்ரீஜேஷ், சுரஜ் கர்கெரா, பின்களம்: ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), ஜர்மன்பிரித் சிங், அமித் ரோஹிதாஸ், ஜூக்ராஜ் சிங், சஞ்சய், சுமித், அமிர் அலி, நடுகளம்: மன்பிரீத் சிங், ஹர்திக் சிங் (துணை கேப்டன்), விவேக் சாகர் பிரசாத், ஷாம்ஷெர் சிங், நீலகண்ட ஷர்மா, ராஜ்குமார் பால், விஷ்ணு காந்த் சிங், முன்களம்: ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், லலித்குமார் உபாத்யாய், அபிஷேக், திப்பிரீத் சிங், சுக்ஜீத் சிங், குர்ஜந்த் சிங், முகமது ரஹீல் முசீன், பாபி சிங் தமி, அரைஜீத் சிங் ஹூன்டால்.

Tags:    

மேலும் செய்திகள்