இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஆக்கி போட்டி இன்று நடக்கிறது

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது.

Update: 2024-04-06 20:12 GMT

image courtesy: HI via ANI

பெர்த்,

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது போட்டி பெர்த்தில் நேற்று நடந்தது.

இதில் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணிக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய அணி திணறியது. முடிவில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணியில் டாம் விக்ஹாம் 2 கோலும் (20-வது, 38-வது நிமிடம்), டிம் பிரான்ட் (3-வது நிமிடம்), ஜோயல் ரின்டாலா (37-வது நிமிடம்), பிளைன் ஒஜில்வி (57-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர்.

இந்திய அணி தரப்பில் குர்ஜந்த் சிங் 47-வது நிமிடத்தில் ஆறுதல் கோல் திருப்பினார். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்