துளிகள்

*இலங்கை – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கீலாங்கில் இன்று நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் கடைசி பந்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய தரங்கா தலைமையிலான இலங்கை அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் தொடரை தனதாக்கி விடும். அதனால் ஆரோன் பி

Update: 2017-02-18 20:57 GMT

* இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர்களில் ஒருவரான ஆர்.பி.ஷா நேற்று திடீரென பதவியை விட்டு விலகினார். அவர் கூறுகையில் ‘எனக்கு 61 வயது ஆகிறது. வயது காரணமாக எனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன். கடந்த டிசம்பர் மாதமே இந்த முடிவை எடுத்து விட்டேன். அது மட்டுமின்றி நான் புனேயில் வசிக்கிறேன். அலுவல் வி‌ஷயமாக அடிக்கடி மும்பைக்கு பயணிக்க வேண்டி இருக்கிறது. இதனால் சேர்ந்து போய் விடுகிறேன். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாக கமிட்டியிடம் இருந்து எனக்கு எந்த நெருக்கடியோ, விசாரணையோ வரவில்லை’ என்றார். புதிய நிர்வாக கமிட்டி, கிரிக்கெட் வாரியத்தின் ஒவ்வொரு பணிகளிலும் தீவிர கவனம் செலுத்துவதன் காரணமாகவே ஆர்.பி.ஷா விலகியிருப்பதாக கிரிக்கெட் வாரிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

*இலங்கை – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கீலாங்கில் இன்று நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் கடைசி பந்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய தரங்கா தலைமையிலான இலங்கை அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் தொடரை தனதாக்கி விடும். அதனால் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய வீரர்கள் பதிலடி கொடுப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். இந்திய நேரப்படி பிற்பகல் 1.50 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

*அமெரிக்காவின் ஒகியோவில் கிளவ்லாண்ட் கிளாசிக் ஸ்குவாஷ் போட்டி நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் 2–வது சுற்றில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 11–9, 11–4, 11–5 என்ற நேர் செட் கணக்கில் கனடாவின் ஹோலி நாடானை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

*பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதன் சூப்பர் சிக்ஸ் சுற்றில் இன்று நடக்கும் கடைசி லீக்கில் இந்தியா–பாகிஸ்தான், இலங்கை–வங்காளதேசம், அயர்லாந்து–தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்