அஜர்பைஜான் பார்முலா1 கார்பந்தயம்: ஆஸ்திரேலிய வீரர் முதலிடம்

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 8–வது சுற்றான அஜர்பைஜான் கிராண்ட்பிரி அங்குள்ள பாகு நகரில் நேற்று நடந்தது.

Update: 2017-06-25 19:25 GMT

பாகு,

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 8–வது சுற்றான அஜர்பைஜான் கிராண்ட்பிரி அங்குள்ள பாகு நகரில் நேற்று நடந்தது. 306.153 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். இதில் 2 மணி 3 நிமிடம் 55.573 வினாடிகளில் இலக்கை கடந்து ஆஸ்திரேலிய வீரர் டேனியல் ரிக்கார்டோ (ரெட்புல் அணி ) முதலிடம் பிடித்தார். வெற்றி பெற்ற அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது. அவரை விட 3.904 வினாடி மட்டுமே பின்தங்கிய பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2–வதாக வந்து 18 புள்ளிகள் பெற்றார். எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 4–வதாகவும், இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 5–வதாகவும் வந்து ஏமாற்றத்திற்குள்ளானார்கள்.

8 சுற்று முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் வெட்டல் 153 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹாமில்டன் 139 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும் உள்ளனர். அடுத்த சுற்று போட்டி ஆஸ்திரியாவில் வருகிற 9–ந்தேதி நடக்கிறது.

மேலும் செய்திகள்