ஈட்டி எறிதல் வீரரின் இலக்கு

ஈட்டி எறிதல் வீரர் நீரஜ்சோப்ரா இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறினார்.

Update: 2018-04-18 22:45 GMT
டெல்லி,

சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார். அவர் 86.47 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். டெல்லியில் நேற்று நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட அரியானாவைச் சேர்ந்த 20 வயதான நீரஜ்சோப்ரா கூறுகையில், ‘காமன்வெல்த் போட்டிக்காக ஜெர்மனியில் மூன்று மாதங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன். பயிற்சிக்கு இடையே நானே சமைத்து சாப்பிட்டேன்.

கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு தான் இந்த தங்கப்பதக்கம். இந்த விளையாட்டை இளைஞர்கள் தேர்வு செய்வதற்கு, நான் உந்துசக்தியாக இருப்பேன் என்று நம்புகிறேன். 90 மீட்டர் தூரம் ஈட்டி எறிய வேண்டும் என்பதே எனது பிரதான இலக்கு. அந்த அளவுக்கு மேல் வீசத் தொடங்கி விட்டால் உலக போட்டிகளிலும், ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்ல முடியும்’ என்றார்.

மேலும் செய்திகள்