பிற விளையாட்டு
பெண்கள் வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

பெண்கள் வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. #AsianGames2018
ஜகார்தா, 

ஆசிய விளையாட்டுபோட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இன்று பெண்கள் வில்வித்தை இறுதிப்போட்டியில்  இந்தியாவும் கொரியாவும் மோதின.

இந்தப்போட்டியில், கொரிய அணியிடம் 228-231 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது. ஆசிய விளையாட்டு போட்டியில் தற்போது வரை இந்தியா,  8 தங்கம், 14 வெள்ளி, 20 வெண்கலம் என 42 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் உள்ளது.