ஆசிய விளையாட்டு போட்டியில் 2–வது வெள்ளி வென்ற டுட்டீ சந்துக்கு மேலும் ரூ.1½ கோடி ஊக்கத்தொகை

இந்தோனேஷியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டி இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்துக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது.

Update: 2018-08-30 21:30 GMT

புவனேஸ்வரம், 

இந்தோனேஷியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டி இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்துக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது. பாலின சர்ச்சையில் சிக்கி மீண்டு வந்த ஒடிசாவை சேர்ந்த டுட்டீ சந்த் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அப்போது அவருக்கு ரூ.1½ கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று ஒடிசா முதல்–மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் டுட்டீ சந்த் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார். 2–வது வெள்ளிப்பதக்கத்தை வென்றதற்கு டுட்டீ சந்துக்கு மேலும் ரூ.1½ கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று ஒடிசா முதல்–மந்திரி நேற்று அறிவித்துள்ளார். அத்துடன் அடுத்த (2020) ஒலிம்பிக் போட்டிக்கு டுட்டீ சந்த் தயாராகுவதற்கு ஆகும் செலவுகள் அனைத்தையும் ஒடிசா அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்