புரோ கபடி: இறுதிப்போட்டியில் பெங்களூரு புல்ஸ்

புரோ கபடி தொடரின் இறுதிப்போட்டிக்கு பெங்களூரு புல்ஸ் அணி தகுதிபெற்றது.

Update: 2018-12-31 22:45 GMT
கொச்சி,

6-வது புரோ கபடி லீக் திருவிழாவில் கொச்சியில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு புல்ஸ் அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் ஒரு கட்டத்தில் குஜராத் அணி 26-20 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் கடைசி கட்டத்தில் எழுச்சி பெற்ற பெங்களூரு அணியினர் மளமளவென புள்ளிகளை சேகரித்து, குஜராத்துக்கு அதிர்ச்சி அளித்தனர்.

முடிவில் பெங்களூரு புல்ஸ் அணி 41-29 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் 2-வது முறையாக நுழைந்தது. பெங்களூரு அணியில் பவான் செராவாத் (13 புள்ளி), ரோகித் குமார் (11 புள்ளி) ஆகியோரின் ஆட்டம் அபாரமாக இருந்தது. தோல்வி அடைந்த குஜராத் அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது.

இதைத் தொடர்ந்து நடந்த 3-வது வெளியேற்றுதல் சுற்றில் உ.பி.யோத்தா அணி 45-33 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை விரட்டியடித்தது. நாளை மறுதினம் நடக்கும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் உ.பி.யோத்தா அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை சந்திக்கிறது.

மேலும் செய்திகள்