முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்

ஆஸ்திரியா நாட்டைச்சேர்ந்த முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்

Update: 2019-05-21 03:38 GMT

முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா (70). ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த இவர் மூன்று முறை ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

1975 ஆண்டு ஃபார்முலா ஒன் கார் பந்தையத்தில் சாம்பியன் பட்டம் வென்ற இவருக்கு 1976-ஆம் ஆண்டு விபத்திற்கு பிறகு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. அந்த விபத்தின் போது அவரது ஃபெராரி கார் கடும் சேதமடைந்ததுடன், அவருக்கும் எழும்பு முறிவு, தீக்காயம் உட்பட உடலில் பல்வேறு விதமான காயங்கள் ஏற்பட்டன.

மெதுவாக அதிலிருந்து மீண்டு, மீண்டும் ஃபார்முலா ஒன் கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் ஃபார்முலா ஒன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

அதன்பின்னர் 1997 முதல் 2005 வரை சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். இந்த ஆண்டு தொடக்கத்திலும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்