ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி

2020ம் ஆண்டு நடைபெற இருக்கிற ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி பெற்றுள்ளார்.

Update: 2019-09-18 08:24 GMT
நூர் சுல்தான்,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் கஜகஸ்தான் நாட்டில் நடந்து வருகின்றன.  இதில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் (வயது 25) கலந்து கொண்டுள்ளார்.  அவர் இன்று நடந்த முதல் சுற்று போட்டியின் 53 கிலோ எடை பிரிவில் உக்ரைன் நாட்டின் யூலியா கால்வாட்ஜை என்பவரை எதிர்கொண்டார்.  அவரை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரான அமெரிக்காவின் சாரா ஹில்டெப்ராண்ட் என்பவரை 8-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதனால் வருகிற 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட போகத் தகுதி பெற்றுள்ளார்.  இதன்பின் இன்று நடைபெறவுள்ள வெண்கல பதக்கம் வெல்வதற்கான மற்றொரு போட்டியில் கிரீஸ் நாட்டு வீராங்கனை மரியா பிரிவோலாரக்கி என்பவரை அவர் எதிர்கொள்கிறார்.

மேலும் செய்திகள்