வில்வித்தை வீராங்கனையை பதம் பார்த்த அம்பு: ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது

வில்வித்தை வீராங்கனையை அம்பு ஒன்று பதம் பார்த்தது. பின்னர் அது ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது.

Update: 2020-01-11 00:12 GMT
புதுடெல்லி,

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள கல்லூரியில் அமைந்துள்ள வில்வித்தை பயிற்சி மையத்தில் நேற்று முன்தினம் சில இளம் வீரர்-வீராங்கனைகள் பயிற்சியாளர் இல்லாமல் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஒரு வீரர் எய்த அம்பு தவறுதலாக பயிற்சியில் ஈடுபட்டு இருந்த 12 வயது இளம் வீராங்கனை ஷிவாங்கினி கோஹைனின் வலது தோள்பட்டையில் பாய்ந்து கழுத்து வரை இறங்கியது. அசாமில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நேற்று ஆபரேஷன் செய்து கழுத்தில் குத்தி இருந்த அம்பை அகற்றினார்கள். சிக்கலான இந்த ஆபரேஷன் 3 மணி நேரம் பிடித்தது. தற்போது ஷிவாங்கினி தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். கூலி தொழிலாளியின் மகளான ஷிவாங்கினியின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்