ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா-கோவா அணிகள் மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ஒடிசா-கோவா அணிகள் மோத உள்ளன.

Update: 2020-01-28 22:42 GMT

* ஹராரேவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே தொடக்க நாள் முடிவில் கேப்டன் சீன் வில்லியம்சின் (107 ரன்) சதத்தின் உதவியுடன் 6 விக்கெட்டுக்கு 352 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே 406 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்துள்ளது.

* இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நேற்று அளித்த பேட்டியில், ‘ஒலிம்பிக் போட்டி நடக்கும் இந்த ஆண்டில் தொடர்ந்து திடமான உடல்தகுதியுடன் இருப்பது முக்கியமானது. 100 சதவீதம் உடல்தகுதியுடன் இல்லாமல் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது. எந்தெந்த சர்வதேச பேட்மிண்டன் தொடரில் விளையாட விரும்புகிறீர்கள் என்பதை திட்டமிட்டு அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். அப்போது தான் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நல்ல நிலையில் இருக்க முடியும்’ என்றார்.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு புவனேசுவரத்தில் நடக்கும் 69-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. அணி, எப்.சி. கோவாவை எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகள்