‘பணத்துக்காக வீரர்களின் நலனை பாதுகாக்க தவறி விட்டனர்’ - ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் அமைப்பாளர்கள் மீது சாய்னா சாடல்

பணத்துக்காக வீரர்களின் நலனை பாதுகாக்க தவறி விட்டதாக, ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் அமைப்பாளர்களை சாய்னா சாடியுள்ளார்.

Update: 2020-03-19 00:25 GMT
புதுடெல்லி,

பர்மிங்காமில் கடந்த வாரம் நடந்த ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார். இந்த தோல்வியினால் அவர் ஒலிம்பிக் போட்டிக்கு மீண்டும் தகுதி பெறுவது கேள்விக்குறியாகி இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த போட்டியை நடத்திய அதன் அமைப்பாளர்களை சாய்னா நேவால் சாடியுள்ளார்.

இது குறித்து சாய்னா நேவால் தனது டுவிட்டர் பதிவில் ‘ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் வீரர்களின் நலனை காட்டிலும் பணத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக நான் நினைக்கிறேன். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த போட்டி திட்டமிட்டபடி நடத்தப்பட்டதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்