விளையாட்டு வீரர்களின் பணக்கார பட்டியலில் கார்பந்தய வீரர் லெவிஸ் ஹாமில்டன் முதலிடம்

இங்கிலாந்தில் விளையாட்டு வீரர்களின் பணக்கார பட்டியலில் கார்பந்தய வீரர் லெவிஸ் ஹாமில்டன் முதலிடம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-05-14 06:41 GMT
லண்டன்,

தி சண்டே டைம்ஸ் என்ற செய்தித்தாள் வெளியிட்ட இங்கிலாந்தில் பணக்கார பட்டியலில், 

ஆறு முறை ஃபார்முலா ஒன் உலக சாம்பியனான லெவிஸ் ஹாமில்டன் இங்கிலாந்தில் விளையாட்டு வீரர்களின் பணக்கார பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 224 மில்லியன் பவுண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட அவரது நிகர மதிப்பு 37 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்துள்ளது.

2015 ஆம் ஆண்டிலிருந்து முதல் முறையாக பிப்ரவரியில் கோல்ஃப் உலக தரவரிசையில் முதலிடம் பிடித்த ரோரி மெக்ல்ராய், 170 மில்லியன் பவுண்டுகள் நிகர மதிப்புடன் முக்கிய பணக்கார பட்டியலில் இடம்பெற்ற ஒரே ஒரு விளையாட்டு வீரர் ஆவார்.

 30 வயதுக்குட்பட்ட பணக்கார பட்டியலில் கால்பந்து வீரர் கரேத் பேல், ரியல் மாட்ரிட்டில் வரிக்குப் பிறகு வாரத்திற்கு 350,000 பவுண்டுகள் சம்பாதிக்கும் வீராக உள்ளார் என்று தெரிவித்துள்ளது. நிகர மதிப்பு 114 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.

உலக குத்துச்சண்டை சாம்பியன் அந்தோனி ஜோசுவா கடந்த ஆண்டு ஆண்டி ரூயிஸ் ஜூனியருடனான தனது இரண்டு போட்டிகளில் இருந்து 78 மில்லியன் பவுண்டுகள் சம்பாதித்தார் எனவும் அவரது நிகர மதிப்பு 107 மில்லியன் பவுண்டுகள் என தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்