ஊக்கமருந்து விவகாரம்: இந்திய கூடைப்பந்து அணியின் முன்னணி வீரரான சத்னம் சிங்கிற்கு 2 ஆண்டுகள் தடை

இந்திய கூடைப்பந்து அணியின் முன்னணி வீரரான சத்னம் சிங் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக 2 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-12-25 18:00 GMT
புதுடெல்லி,

இந்திய கூடைப்பந்து அணியின் முன்னணி வீரரான சத்னம் சிங் தெற்காசிய விளையாட்டு போட்டிக்காக பெங்களூரில் பயிற்சியில் இருந்தபோது, நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில், அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இடை நீக்கம் செய்யப்பட்ட அவர்,  கடந்த 2015 ஆம் ஆண்டு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து என்.பி.ஏ அணியில் சேர்க்கப்பட்ட முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்ற சத்னம் சிங் பமாராவுக்கு, கடந்த ஆண்டு மீண்டும் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில், அவர் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து என்.ஏ.என்ஏ. (NANA) உத்தரவிட்டது. ஆனால் இந்த தடையை எதிர்த்து சத்னம் சிங் ஊக்கமருந்து தடுப்பு பிரிவு (ஏடிடிபி) விசாரணைக்கு கோரியிருந்தார்.

இது குறித்து நடைபெற்று வந்த விசாரணையில், “சத்னம் சிங், ஹிகனமைன் பீட்டா -2-அகோனிஸ்டுக்கு என்ற தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு ஊக்கமருந்து தடுப்பு குழு 2 ஆண்டுகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை ஏன்.ஏ.என்.ஏ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, டல்லாஸ் மேவரிக்ஸ் என்பிஏ அணிக்காக விளையாடி வரலாற்று சாதனை படைத்த சத்னம் சிங், அதன்பிறகு டெவலப்மென்ட் லீக் அடுத்த இரண்டு ஆண்டுகளில் டல்லாஸ் மேவரிக்ஸின் மற்றும் டெக்சாஸ் லெஜெண்ட்ஸுடன் விளையாடினார். மேலும் கனடாவின் தேசிய கூடைப்பந்து லீக்கில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்