கொரோனா பரவல் எதிரொலி: இந்திய ஓபன் பேட்மிண்டன் தள்ளிவைப்பு

கொரோனா பரவல் எதிரொலி: இந்திய ஓபன் பேட்மிண்டன் தள்ளிவைப்பு.

Update: 2021-04-19 21:09 GMT
புதுடெல்லி, 

மொத்தம் ரூ.3 கோடி பரிசுத் தொகைக்கான இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் மே 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ரசிகர்கள் இன்றி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. டோக்கியோ ஒலிம்பிக்குரிய தகுதி சுற்றாகவும் இந்த போட்டி அமைந்திருந்ததால் ஒலிம்பிக், உலக சாம்பியன் உள்பட உலகம் முழுவதும் 228 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க தங்களது பெயரை ஆர்வமுடன் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பேட்மிண்டன் சங்க நிர்வாகிகள், டெல்லி அரசு அதிகாரிகளுடன் பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தற்போதைய சூழலில் இந்த போட்டியை தள்ளிவைப்பது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த தகவலை இ்ந்திய பேட்மிண்டன் சங்க பொதுச்செயலாளர் அஜய் சிங்ஹானியா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்