டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு தகுதிபெற்றார்.

Update: 2021-06-13 02:44 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெண்கலப்பதக்கம் வென்றார். 

இதையடுத்து சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் வெளியிட்ட முழுமையான ரேங்கிங் அடிப்படையில் மணிப்பூரை சேர்ந்த 26 வயதான மீராபாய் சானு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார். இதனை பளுதூக்குதல் சம்மேளனம் நேற்று உறுதி செய்தது. 

49 கிலோ பிரிவின் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த மீராபாய் சானு, ஒலிம்பிக் போட்டியில் இருந்து வடகொரியா வீராங்கனைகள் விலகியதை தொடர்ந்து 2-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அவர் தொடர்ந்து 2-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார்.

மேலும் செய்திகள்