ஒலிம்பிக் பதக்கத்தில் பயன்படுத்தப்பட்ட செல்போன் பாகங்கள்

ஒலிம்பிக் பதக்கத்தில் பயனற்ற ஸ்மார்ட் செல்போன்கள், டிஜிட்டல் கேமராக்கள் உள்ளிட்டவற்றை உடைத்து அதில் இருந்த உலோகங்களை பிரித்து பதக்கம் தயாரிப்பில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

Update: 2021-07-03 00:26 GMT
டோக்கியோ, 

ஒலிம்பிக் விளையாட்டு டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து பாரா ஒலிம்பிக்கும் நடக்கிறது. இந்த போட்டிக்காக ஆயிரக்கணக்கான தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்கள் தயாராகி உள்ளன. இந்த பதக்கங்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பழைய எலக்ட்ரானிக் பொருட்களின் உலோகங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. பழைய லேப்டாப், பயனற்ற ஸ்மார்ட் செல்போன்கள், டிஜிட்டல் கேமராக்கள் உள்ளிட்டவற்றை உடைத்து அதில் இருந்த உலோகங்களை பிரித்து பதக்கம் தயாரிப்பில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்காக ஜப்பான் மக்கள் ஏராளமான எலக்ட்ரானிக் பொருட்களை நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்