தரவரிசையில் நீரஜ் சோப்ரா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

ஈட்டி எறிதல் வீரருக்கான புதிய தரவரிசை பட்டியலில் நீரஜ் சோப்ரா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Update: 2021-08-13 02:26 GMT
புதுடெல்லி,

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டிஎறிதலில் தங்கப்பதக்கம் வென்று சரித்திர சாதனை நிகழ்த்திய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தரவரிசையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளார். உலக தடகள சம்மேளனம் வெளியிட்டுள்ள ஈட்டி எறிதல் வீரருக்கான புதிய தரவரிசை பட்டியலில் நீரஜ் சோப்ரா 16-ல் இருந்து 2-வது இடத்துக்கு (1,315 புள்ளி) முன்னேறியுள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். மற்றொரு இந்திய வீரர் ஷிவ்பால்சிங் 2 இடம் சரிந்து 20-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஒலிம்பிக்கில் சோப்ராவுக்கு சவால்விட்டு சறுக்கலை சந்தித்த ஜெர்மனி வீரர் ஜோகனஸ் வெட்டர் முதலிடத்தில் (1,396 புள்ளி) நீடிக்கிறார். போலந்தின் மார்சின் குருகோவ்ஸ்கி 3-வது இடத்திலும், செக்குடியரசின் ஜாகுப் வாட்லெஜ் 4-வது இடத்திலும், ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் 5-வது வது இடத்திலும் உள்ளனர்.

பெண்களுக்கான ஈட்டி எறிதல் தரவரிசையில் இந்திய வீராங்கனை அன்னு ராணி 16-வது இடத்தில் இருக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் அன்னுராணி இறுதி சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்