பயிற்சியாளராக இந்திய குத்துச்சண்டை அணிக்கு திரும்புகிறார் சுரஞ்சோய் சிங்

2009 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய குத்துசண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற இவர் 2010 ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்க பதக்கம் வென்றார்

Update: 2021-10-12 10:53 GMT
டெல்லி 

இந்திய அணியின்  முன்னாள் குத்துச்சண்டை வீரர் சுரஞ்சோய் சிங். "லிட்டில் டைசன்" என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் இந்தியாவின் சிறந்த குத்துசண்டை வீரராக விளங்கியவர் . தனது ஆக்ரோஷமான ஆட்டங்களால் பல போட்டிகளில் எதிர் அணி வீரர்களுக்கு தோல்வியை பரிசளித்தவர். 

2009 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற இவர் 2010 ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும்  தங்க பதக்கம் வென்றார்.தொடர் காயம் காரணமாக குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதில்  இருந்து 2015 ஆம் ஆண்டு இவர் ஓய்வு பெற்றார்.

35 வயதாகும்  சுரஞ்சோய் சிங் தற்போது பயிற்சியாளராக இந்திய குத்துச்சண்டை அணிக்கு திரும்ப இருக்கிறார். இவருடன் சேர்ந்து மொத்தம் 14 பயிற்சியாளர்கள் நியமிக்கபடவுள்ளனர்.

இந்த மாதம் 24 ஆம் தேதி சேர்பியாவில் தொடங்க இருக்கும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன் இவர்கள் இந்திய அணியுடன் இணைய உள்ளனர்.

மேலும் செய்திகள்