சர்வதேச ஓபன் செஸ்: தமிழக வீரர் இனியன் ‘சாம்பியன்’

சர்வதேச ஓபன் செஸ்: தமிழக வீரர் இனியன் ‘சாம்பியன்’.

Update: 2021-10-13 22:55 GMT
சென்னை,

லா நூசியா சர்வதேச ஓபன் செஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது. இதில் 14 நாடுகளை சேர்ந்த 88 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 8 ஆட்டங்களில் மட்டும் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பி.இனியன் 6 வெற்றி, 2 டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.

மேலும் செய்திகள்