ஆசிய விளையாட்டு போட்டிகள்: கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல தொடக்கம் - இந்திய வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு...!

ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா சீனாவின் ஹாங்சோவில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-09-23 01:24 GMT


Live Updates
2023-09-23 14:00 GMT

ஆசிய விளையாட்டு போட்டிகள்: ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், உலக குத்துச்சண்டை சாம்பியன் லல்வினா போர்கோஹைன் ஆகியோர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றனர். அவர்களை தொடர்ந்து இந்திய வீரர்கள் அணி வகுத்து சென்றனர்.

2023-09-23 13:12 GMT

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் உள ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் ஸ்டேடியத்தில் துவக்க விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

தொடங்கிய விழாவில் சீனாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் நாட்டை அறிமுகப்படுத்தும் வகையில் தேசியக்கொடியுடன் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.  

2023-09-23 12:28 GMT

ஒலிம்பிக்கிற்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழா ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு இந்த போட்டிகள் 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018ம் ஆண்டு இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகள் ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ஹாங்சோவ் நகரில் உள்ள தாமரைப்பூ வடிவிலான ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் ஸ்டேடியத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு துவக்க விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவில் கலந்துகொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆசிய போட்டிகளை தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவில் சீனாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 

2023-09-23 10:40 GMT

பாய்மர படகு போட்டிகள்:-

பாய்மர படகு போட்டியில் ஆண்கள் ஸ்கிப் - 49இஆர் பிரிவில் ரேஸ் - 7 சுற்றில் இந்தியாவின் கேசி கணபதி, வருண் தாக்கர் முதல் இடம் பிடித்தனர். ரேஸ் - 8 சுற்றில் இந்தியாவின் கேசி கணபதி, வருண் தாக்கர் 6வது இடம் பிடித்தனர்.

பாய்மரப்படகு போட்டி கலப்பு டிங்ஹி-470 பிரிவில் ரேஸ் 5ல் இந்தியாவின் பிரீத்தி கொங்கரா-சுதான்சு ஷெகர் 4ம் இடம் பிடித்தனர். இதே பிரிவில் ரேஸ் 6ல் இந்த இணை மீண்டும் 4ம் இடம் பிடித்தது.

பாய்மரப்படகு போட்டி ஆண்கள் டிங்ஹி-ஐஎல்சிஏ4 பிரிவில் ரேஸ்5ல் இந்திய வீரர் ஆத்வித் மேனன் 8ம் இடம் பிடித்தார். இதே பிரிவில் ரேஸ் 6ல் ஆத்வித் மேனன் 10ம் இடம் பிடித்தார்.

பாய்மரப்படகு போட்டி ஆண்கள் விண்ட்சர்பிங் ஐகியூபொயில் பிரிவில் ரேஸ் 9ல் இந்திய வீரர் சவரிமுத்து ஜெரொம்குமார் 7ம் இடம் பிடித்தார். இதே பிரிவில் ரேஸ்10ல் சவரிமுத்து 8ம் இடம் பிரித்தார். ரேஸ்11ல் சவரிமுத்து 3ம் இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற ரேஸ் 12ல் இந்திய வீரர் சவரிமுத்து 7ம் இடம் பிடித்தார்.

பாய்மரப்படகு பெண்கள் ஸ்கிப்-49 இஆர்எப்எக்ஸ் பிரிவில் ரேஸ் 7ல் இந்திய இணை ஹர்ஷிதா தமூர் - ஷிதல் வர்மா முதல் இடம் பிடித்தனர். இதேபிரிவில் ரேஸ் 8ல் இந்திய இணை ஹர்ஷிதா தமூர் - ஷிதல் வர்மா 5ம் இடம் பிடித்தனர்.

பாய்மரப்படகு பெண்கள் டிங்ஹி-ஐஎல்சிஏ4 ரேஸ்5ல் இந்தியாவின் நிஹா தாக்கூர் 5ம் இடம் பிடித்தார். ரேஸ் 6ல் நிஹா தாக்கூர் 3ம் இடம் பிடித்தார்.

பாய்மரப்படகு பெண்கள் ஒற்றையர் டிங்ஹி-ஐஎல்சிஏ6 ரேஸ்5ல் இந்தியாவின் குமணன் நேத்ரா 2ம் இடம் பிடித்தார். இதேபிரிவில் ரேஸ் 6ல் குமணன் நேத்ரா 7ம் இடம் பிடித்தார்.

பாய்மரப்படகு கலப்பு மல்டிஹல் - நஹ்ரா17 பிரிவில் ரேஸ் 7ல் இந்திய இணை சித்தேஷ்வர் இந்தர் - ரம்யா சரவணன் இணை 4ம் இடம் பிடித்தனர். ரேஸ் 8ல் இந்த இணை 2ம் இடம் பிடித்தது.

பாய்மரப்படகு ஆண்கள் விண்ட்சர்பர் ஆர்எஸ்:எக்ஸ் - ஆர்எஸ்எக்ஸ் பிரிவில் ரேஸ் 7ல் இந்தியாவின் எபெட் அலி 4ம் இடம் பிடித்தார். இதேபிரிவில் ரேஸ் 8-ல் எபெட் அலி 4ம் இடம் பிடித்தார்.

பாய்மரப்படகு ஆண்கள் கீட் - ஐகேஏ பார்முலா கீட் பிரிவு ரேஸ் 9ல் இந்தியாவின் சித்ரேஷ் தஹா 7ம் இடம் பிடித்தார். இதே பிரிவில் சித்ரேஷ் தஹா ரேஸ் 10ல் 5ம் இடத்தையும், ரேஸ் 11ல் 6ம் இடத்தையும், ரேஸ் 12ல் 7ம் இடத்தையும் பிடித்தார்.

பாய்மரப்படகு ஆண்கள் டிங்ஹி-ஐஎல்சிஏ7 பிரிவில் ரேஸ் 5ல் இந்தியாவின் விஷ்ணு சரவணன் 5ம் இடத்தை பிடித்தார். இதேபிரிவில் ரேஸ் 6ல் சரவணன் 2ம் இடத்தை பிடித்தார். ரேஸ் 7ல் சரவணன் 5ம் இடம் பிடித்தார்.

பாய்மரப்படகு பெண்கள் விண்ட்சர்பர் ஆஎஸ்: எக்ஸ் - ஆஎஸ்:எக்ஸ் பிரிவில் ரேஸ் 7ல் இந்தியாவின் ஐஸ்வர்யா கணேஷ் 4ம் இடம் பிடித்தார். இதே பிரிவில் ரேஸ் 8ல் ஐஸ்வர்யா 4ம் இடம் பிடித்தார்.

2023-09-23 07:11 GMT

ஆசிய விளையாட்டு குரூப் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய டேபிள் டென்னிஸ் அணியினர் மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்த காட்சியை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது.



2023-09-23 06:58 GMT

ஆசிய போட்டிக்கு ஆயத்தமாகும் இந்திய பெண்கள் ரக்பி அணி

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய பெண்கள் ரக்பி அணியினர் பயிற்சி பெறும் வீடியோவை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. பதக்கம் வெல்லும் ஆர்வத்துடன் போட்டியில் களமிறங்கும் அவர்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளது.

2023-09-23 05:03 GMT

டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய் வெற்றி பெற்றார். தஜிகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். பைனல் ஸ்கோர்: 11-1, 11-3, 11-5

2023-09-23 04:57 GMT

ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் முதல்நிலை சுற்றின் 3வது போட்டியில், தஜிகிஸ்தான் வீரர் இப்ரோகிம் இஸ்மாயில்சோடா- இந்திய வீரர் ஹர்மீட் ராஜூல் தேசாய் மோதியுள்ளன.

2023-09-23 04:44 GMT

ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் முதல்நிலை சுற்றின் 2-வது போட்டியில் 2-வது செட்டில் 11-7 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

Tags:    

மேலும் செய்திகள்