கேண்டிடேட் செஸ் போட்டி: 11-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி

கேண்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது

Update: 2024-04-18 10:05 GMT

டொராண்டோ,

உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேண்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர்.14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 11-வது சுற்று நேற்று நடந்தது.சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த பேபியானோ கருணாவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் இந்த போட்டியில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிரா செய்தார்.

மற்றொரு சென்னை கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா மற்றும் விதித் குஜராத்தி ஆகியோர் 11-வது சுற்றில் தோல்வியை தழுவினார்கள். ஹிகாரு நகமுரா (அமெரிக்கா) பிரக்ஞானந்தாவையும், இயன் நெபோம்னியாச்சி (ரஷியா) விதித் குஜராத்தியையும் தோற்கடித்தனர்.11 சுற்றுகள் முடிவில் ரஷிய வீரர் இயன் நேபோம்னியாச்சி 7 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். டி.குகேஷ், ஹிகாரு நகமுரா ஆகியோர் தலா 6.5 புள்ளியுடன் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளனர.பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்