இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் : அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி

பிரனாய் இந்தோனேசிய ஓபன் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார் .

Update: 2022-06-18 19:04 GMT

Image Courtesy : PTI 

ஜகார்த்தா:

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் ,சீனாவின் ஜாவோ ஜுன் பெங் ஆகியோர் மோதினார்.

விறுவிறுப்பான இந்தப் போட்டியில் பிரனாய் 16-21,15-21, என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார் . இதனால் அவர் இந்தோனேசிய ஓபன் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்