உலகின் சிறந்த ஆண்கள் தடகள வீரர் விருது பட்டியலில் நீரஜ் சோப்ரா!

வெற்றியாளர் டிசம்பர் 11ஆம் தேதி உலக தடகள அரங்கில் அறிவிக்கப்படவுள்ளார்.

Update: 2023-11-15 07:54 GMT

image courtesy;AFP

புதுடெல்லி,

2023 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த ஆண்கள் தடகள வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஐந்து வீரர்களில் ஒருவராக இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா பெயரும் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக உலக தடகள அமைப்பு ஒரு அறிக்கையில், 2023 ஆம் ஆண்டு தடகள போட்டிகளில் சிறந்து விளங்கிய நான்கு நாடுகளை சேர்ந்த ஐந்து வீரர்கள் உலக தடகள விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆண்டின் சிறந்த ஆண்கள் தடகள வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்

1. நீரஜ் சோப்ரா (இந்தியா)-ஈட்டி எறிதல்

2. ரியான் க்ரூசர் (அமெரிக்கா)-குண்டு எறிதல்

3. மொண்டோ டுப்லாண்டிஸ் (சுவீடன்)- போல் வால்ட்

4. கெல்வின் கிப்டம் (கென்யா)- மாரத்தான்

5. நோவா லைல்ஸ் (அமெரிக்கா) - ஓட்டப்பந்தயம்

உலக தடகள கவுன்சில், ரசிகர்கள் தங்களது வாக்குகளை மின்னஞ்சல் மூலம் பதிவு செய்து வெற்றியாளரை தேர்வு செய்யும்படி வழி செய்தது. வாக்குப்பதிவு கடந்த மாதம் 28ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதன்படி சுமார் 2 மில்லியன் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் வெற்றியாளர் டிசம்பர் 11ஆம் தேதி உலக தடகள அரங்கில் அறிவிக்கப்படவுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்