புரோ கபடி ஏலம்: பவான் செராவத்தை ரூ.2¼ கோடிக்கு வாங்கியது தமிழ் தலைவாஸ்
12 அணிகள் இடையிலான 9-வது புரோ கபடி லீக் போட்டி விரைவில் நடக்க உள்ளது.;
கோப்புப்படம்
மும்பை,
12 அணிகள் இடையிலான 9-வது புரோ கபடி லீக் போட்டி விரைவில் நடக்க உள்ளது. இதற்கான வீரர்களின் 2 நாள் ஏலம் மும்பையில் நேற்று தொடங்கியது.
ஏலப்பட்டியலில் 500 வீரர்கள் உள்ளனர். முதல் நாளில் வியப்பூட்டும் அளவுக்கு அதிகபட்சமாக பவான் செராவத் ஏலம் போனார். அவரை ரூ.2.26 கோடிக்கு தமிழ் தலைவாஸ் அணி வாங்கியது.
விகாஸ் கன்டோலாவை ரூ.1.7 கோடிக்கு பெங்களூரு புல்சும், பாஸல் அட்ராசலியை ரூ.1.38 கோடிக்கு புனேரி பால்டனும் எடுத்தது.