மலேசியாவில் நடந்த போட்டியில் தமிழக கராத்தே குழுவினர் 9 பதக்கம் வென்றனர்

மலேசியாவில் நடந்த போட்டியில் தமிழக கராத்தே குழுவினர் 9 பதக்கங்களை வென்றனர்.

Update: 2022-06-01 23:25 GMT

சென்னை,

18-வது சர்வதேச ஒகினாவா கோஜூ- ரியூ கராத்தே போட்டி மலேசியாவின் இபோ நகரில் நடந்தது. இதில் ஆர்.வி.டி. கராத்தே மணி நிறுவிய புடோகை இன்டர்நேஷனல் கராத்தே பயிற்சி பள்ளி தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் இ.கெபிராஜ் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.

அவர்களில் கெபிராஜ் (வெள்ளிப்பதக்கம்), கீர்த்திகா (ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி), அமலியா (ஒரு தங்கம், ஒரு வெண்கலம்), கீர்த்திவாசன் (ஒரு தங்கம், ஒரு வெள்ளி), பிரதீஷா (ஒரு தங்கம், ஒரு வெண்கலம்) ஆகியோர் பதக்கங்களை வென்றனர். போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களுடன் திரும்பிய தமிழக கராத்தே குழுவினருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த குழுவில் சென்னை வில்லிவாக்கம் அரசு பள்ளியில் படித்த பழங்குடியின வகுப்பை சேர்ந்த மாணவி ஒருவரும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்