நீலகிரி மாவட்ட அளவிலான கபடி போட்டிக்கு உபதலை அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு

நீலகிரி மாவட்ட அளவிலான கபடி போட்டிக்கு உபதலை அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு

Update: 2023-07-25 19:00 GMT

குன்னூர்

நீலகிரி மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்குரிய பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. குன்னூர் குறுமைய கபடி போட்டிகள் குன்னூர் புனித ஜோசப் பெண்கள் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் உபதலை அரசு மேல் நிலைப் பள்ளி அணி, தூதூர்மட்டம் அரசு பள்ளி அணியை சந்தித்தது.

இதில் 29-9 என்ற புள்ளி கணக்கிலும், வெலிங்டன் புனித சூசையப்பர் பள்ளி அணியை 30-10 என்ற புள்ளி கணக்கிலும் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில் என்.எஸ் ஐயா மேல்நிலைப் பள்ளி அணியை 45-32 என்ற புள்ளி கணக்கில் வென்று மாவட்ட அளவிலான போட்டிக்கு முதன்முறையாக தகுதி பெற்றது. வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் பயிற்சி அளித்த விளையாட்டு ஆசிரியர் திரு சீனிவாசன் ஆகியோருக்கு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்