சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.

Update: 2023-08-19 02:39 GMT

Image Courtesy: @CincyTennis

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஜோகோவிச் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-0, 6-4 என்ற செட் கணக்கில் டெய்லர் பிரிட்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இவர் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் உடன் மோத உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்