சூரியனை படம்பிடித்த ஆதித்யா எல்1: புகைப்படங்கள் வெளியீடு

200 முதல் 400 நானோ மீட்டர் வரையிலான சூரிய புற ஊதா கதிர்களின் வட்ட அலை நீளங்கள் படம் எடுக்கப்பட்டுள்ளன.

Update: 2023-12-08 12:54 GMT

புதுடெல்லி,

ஆதித்யா விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள SUIT தொழில்நுட்பக் கருவி சூரியனின் புற ஊதா அலை நீளங்களை புகைப்படம் எடுத்துள்ளது. 200 முதல் 400 நானோ மீட்டர் வரையிலான சூரிய புற ஊதா கதிர்களின் வட்ட அலை நீளங்கள் படம் எடுக்கப்பட்டுள்ளன.

சூரியனின் ஒலி கோளம், குரோமோஸ்பியர் குறித்தான, சிக்கலான வடிவம் குறித்தான தெளிவான புகைப்படத்தை ஆதித்யா எல்1 படம் பிடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நவம்பர் 20-ம் தேதி SUIT தொலைநோக்கி ஆன் செய்யப்பட்ட நிலையில் 2-வது புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. 6-ம் தேதி ஒளி புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் தற்போது சூரியனின் முழுதோற்ற புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. சூரியனை பற்றிய மேலும் பல புதிய தகவல்களை அறிய இந்த புகைப்படங்கள் உதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்