3 மொழிகளில் 5 படங்கள் - கலக்கும் கயாடு லோகர்

'டிராகன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கயாடு லோகர் சமூக வலைதளங்களில் அதிகம் தேடும் நடிகையாக மாறிவிட்டார்.;

Update:2025-10-10 08:02 IST

சென்னை ,

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் கடை திறப்பு விழாவில் நடிகை கயாடு லோகர் கலந்துகொண்டார். அசத்தலான ஆடையில் வருகை தந்த அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழாவுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கயாடு, தனது அடுத்த படங்கள் குறித்து பேசினார். அதன்படி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் 5 படங்களில் நடித்து வருவதாக தெரிவித்தார். மேலும், சிம்புவுடன் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் கூறினார்.

'டிராகன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கயாடு லோகர் சமூக வலைதளங்களில் அதிகம் தேடும் நடிகையாக மாறிவிட்டார். தற்போது ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் அதர்வாவுடன் 'இதயம் முரளி' திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்