அப்துல் கலாம் அய்யா அழியாது உமது புகழ் - வைரமுத்து

அப்துல் கலாம் எங்களுக்கு வாய்த்த இஸ்லாமிய காந்தி என வைரமுத்து தெரிவித்துள்ளார்;

Update:2025-10-15 09:01 IST

சென்னை,

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

படகுவிடும் குடும்பம் உங்களுடையது நீங்களோ ஏவுகணை விடுத்தீர்கள்

வடலூர் வள்ளலாரும் நீங்களும் ஏற்றிய அக்கினி மட்டும் அணைவதே இல்லை

எங்களுக்கு வாய்த்த இஸ்லாமிய காந்தி நீங்கள்

ஜனாதிபதி மாளிகையில் கைப்பெட்டியோடு நுழைந்துன் கைப்பெட்டியோடு வெளிவந்த கர்ம வீரரே!

மீண்டு வரும்போது அந்தப் பெட்டிக்குள் ஒன்றும் இல்லை என்பதில் உண்மை இல்லை

130 கோடி இந்திய இதயங்களை அந்தச் சின்னப் பெட்டிக்குள் சிறைகொண்டு வந்தீரே

அப்துல் கலாம் அய்யா அழியாது உமது புகழ்; அது இந்திய வானத்தில் எழுதப் பட்டிருக்கிறது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்