பழைய கட்டிடத்தில் குழந்தை சத்தம்...பிரபல நடிகையின் சகோதரி செய்த செயல்...குவியும் பாராட்டு

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி.;

Update:2025-04-21 13:46 IST

மும்பை,

பாலிவுட் சினிமாவில் பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. இவரது சகோதரி குஷ்பு பதானி. இவர் தனது தந்தை ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜெகதீஷ் பதானியுடன் உத்தரபிரதேசத்தில் உள்ள பரேலியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவரின் துணிச்சலான செயலுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதன்படி, நேற்று காலை குஷ்பு பதானி எப்போதும்போல நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகில் இருக்கும் பழைய கட்டிடத்தில் இருந்து குழந்தை அழும் சத்தம் அவருக்கு கேட்டுள்ளது.

இதனை கவனித்த குஷ்பு, கட்டிடத்திற்குள் செல்ல முயற்சித்தார். ஆனால், பாதை எதுவும் தெரியாததால் சுவர் ஏறி குதித்து அதற்குள் சென்று பார்த்தபோது 9 முதல் 10 மாத குழந்தை ஒன்று காயங்களுடன் இருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், குழந்தையை உடனே வீட்டிற்கு கொண்டு வந்து முதலுதவி அளித்தார். பின்னர் போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து குழந்தையை விட்டு சென்றது யார் என்பது தொடர்பாக போலீச்விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஷ்பு பதானியின் இந்த துணிச்சலான செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்