ரீ-ரிலீஸாகும் மாதவனின் “ரன்” திரைப்படம்

நடிகர் மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்த ‘ரன்’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் லிங்குசாமி கூறியுள்ளார்.;

Update:2025-08-27 21:34 IST

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம் ரன். காதல் - ஆக்சன் திரைப்படமாக உருவான இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. முக்கியமாக, படத்தின் சண்டைக் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தினை தயாரிப்பாளர் எ.எம். ரத்னம் தயாரிக்க, இசையமைப்பாளர் வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகி 23 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள நிலையில், இதனை ரீ-ரிலீஸ் செய்யவுள்ளதாக இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். ரன் வருகிற செப்டம்பர் 5ம் தேதி ரீ-ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, கேரளாவிலும் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்