அண்ணாமலையார் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ’பென்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பல்வேறு பிரபலங்கள் குறிப்பாக அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் தினந்தோறும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ், அவரது மகன் மற்றும் தாயுடன் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
ராகவா லாரன்ஸ் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 'பென்ஸ்' படத்திலும் 'காஞ்சனா 4'படத்திலும் நடித்து வருகிறார்.