பான் இந்தியா அளவில் ஜொலித்து வரும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி

நடிகர் கிங்ஸ்லி தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார்.;

Update:2025-07-22 06:56 IST

சென்னை,

'கோலமாவு கோகிலா', 'கூர்கா', 'டாக்டர்', 'பீஸ்ட்', 'ஜெயிலர்', 'மார்க் ஆண்டனி' போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர், ரெடின் கிங்ஸ்லி.

இவரது வேகமான பேச்சும், 'டைமிங்' காமெடியும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. டி.வி. நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்ட கிங்ஸ்லிக்கு, சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.

நடிகர் கிங்ஸ்லி தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். இதுதவிர மலையாளத்தில் நிவின்பாலி-நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் என 3 படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். கன்னடத்திலும் 3 படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படி பான் இந்தியா அளவில் ஜொலித்து வரும் ரெடின் கிங்ஸ்லியின் வளர்ச்சி, முன்னணி நடிகர்களையும் ஆச்சரியம் கொள்ள செய்து வருகிறது.

இது குறித்து நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசும்போது, ''தமிழ் தாண்டி பிற மொழிகளிலும் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையும், உழைப்பும் இருந்தால் யாரும் முன்னேறலாம். என் வெற்றிக்கு படிக்கட்டுகளாக இருந்த அத்தனை பேரையும் நன்றியுடன் நினைவுகூறுகிறேன். ரசிகர்களை மகிழ்விப்பதே என் வேலை'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்