அண்ணாமலையார் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்த நடிகர் ஸ்ரீகாந்த்

நடிகர் ஸ்ரீகாந்த் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்திருக்கிறார்.;

Update:2025-03-22 06:21 IST

திருவண்ணாமலை ,

கடந்த 2002ஆம் ஆண்டில் வெளியான 'ரோஜாக்கூட்டம்' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். தொடர்ந்து பார்த்திபன் கனவு, ஜூட், கனா கண்டேன், ஒரு நாள் ஒரு கனவு, பூ, மந்திரப் புன்னகை, நண்பன் உள்ளிட்ட பல பங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 2007-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. தற்போது இவர் " கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் " இந்த படத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக பூஜிதா நடித்துள்ளார். இரண்டாவது நாயகனாக பரதனும் இரண்டாவது நாயகியாக நிமி இமானுவேலும் நடித்துள்ளனர். கடந்த 11-ம் தேதி வெளியான இப்படம் கலைவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்திருக்கிறார். பின்னர் அங்கு கூடியிருந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்