பைசன் படத்தை பாராட்டிய நடிகை நிவேதா பெத்துராஜ்
வாழை படத்தையடுத்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ள படம் பைசன்.;
சென்னை,
துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்தை நடிகை நிவேதா பெத்துராஜ் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"பைசன் என்னை உள்ளுக்குள் உலுக்கியது...உணர்ச்சி மிகுந்த ஒரு படைப்பு. விளையாட்டு மற்றும் சமூக வரலாற்றின் அதிர்வூட்டும் கலவையாக உள்ளது. இதற்கு முன் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறியத் தூண்டுகிறது. இவ்விதம் தான் ஒருவர் வலியை கலையாக மாற்றுகிறார் ’’ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
வாழை படத்தையடுத்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ள படம் பைசன். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க அனுபமா கதாநாயகியாக நடித்துள்ளார். கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் பாராட்டுகளை பெற்று வருகிறது.