"பாபநாசம்" படத்திற்குப் பிறகு போலீஸ் கேரக்டர்கள் மட்டுமேதான் வந்தது - ஆஷா சரத்

கமலின் ‘பாபநாசம்’ திரைப்படம் வெளியாகி பத்தாண்டுகளைக் கடந்திருக்கிறது.;

Update:2025-07-20 15:20 IST

மலையாள சினிமாவில் அதிக படங்கள் நடித்து வருபவர், நடிகை ஆஷா சரத். இவர் தமிழில் 'பாபநாசம்' படத்தில் போலீஸ் அதிகாரியாக கம்பீரமான வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அந்த படம் குறித்த சில தகவல்களை ஆஷா சரத் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

அதில், "பாபநாசம் படத்தைப் பற்றி பேசுவதாக இருந்தால், மலையாளத்தில் வெளியான 'திரிஷ்யம்' படத்தையும் நான் சொல்லியாக வேண்டும். அதன் ரீமேக்தான் 'பாபநாசம்'. அந்த இரண்டு படங்களின் வாய்ப்பையும் கடவுள் எனக்கு அளித்ததாகவே நினைக்கிறேன். மலையாள படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்தான் தமிழிலும் இப்படத்தை இயக்கினார். அவர் முதலில் மலையாளத்தில் நடித்த எந்த நடிகரும் தமிழில் இல்லை என்றுதான் சொன்னார். பின்னர் திடீரென்று என்னை 'பாபநாசம்' படத்திற்கு அழைத்தார். கமலுடன் நடிப்பது ஒவ்வொரு நடிகையின் கனவு. எனக்கு அது பலித்தபோது, மகிழ்ச்சியின் உச்சத்தை உணர்ந்தேன். அந்தப் படத்திற்கு பிறகு தமிழில் தொடர்ந்து போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்குத்தான் வாய்ப்பு வந்தது. அதனால்தான் தமிழில் பெரிய இடைவெளி வந்துவிட்டது. இனி வரும் காலத்தில் தமிழ் சினிமாவிலும் என் பயணம் இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்