வெற்றி கோப்பையுடன் அஜித்.. வைரலாகும் புகைப்படம்
பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்தின் அணி 2-வது இடம் பிடித்து சாதனை படைத்தது.;
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், கார் பந்தய வீரராகவும் திகழ்ந்து வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்தது. இதைத் தொடர்ந்து பெல்ஜியம் நாட்டில் Spa Francorchamps சர்கியூட்டில் நடைபெற்ற ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் தனது அணியுடன் கலந்துக் கொண்டார்.
இந்த பந்தயத்தில் அஜித்தின் அணி 2-வது இடம் பிடித்து சாதனை படைத்தது. அந்த வெற்றி குறித்து அஜித், ரேஸிங் பயிற்சி முதல் வெற்றி வரை உங்களின் ஆதரவின்றி ஜிடி4 ரேஸில் வென்றிருக்க முடியாது. இதனை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வெற்றி கோப்பையுடன் அஜித் நிற்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் 'அஜித்குமார் ரேஸிங்' அணி பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.